உள்ளூர் செய்திகள்

கடலூருக்கு கொண்டு செல்ல திட்டக்குடி வாக்குபதிவு எந்திரங்கள் ஏற்றப்பட்ட காட்சி. 

கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்ட திட்டக்குடி தொகுதி வாக்குபதிவு எந்திரங்கள்

Published On 2022-06-26 12:58 IST   |   Update On 2022-06-26 12:58:00 IST
  • கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திட்டக்குடி தொகுதி வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
  • மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் விருத்தாசலத்தில் இருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்படுவது வழக்கம்.

கடலூர் 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் இருந்து 2021 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் விருத்தாசலத்தில் இருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்படுவது வழக்கம் அதன்படி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதியதாக தேர்தலில் பயன்படும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைப்பதற்காக பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டு அதில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து வருகின்றது.

திட்டக்குடி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரம் 305, வாக்குப்பதிவு எந்திரம் 306 ,கட்டுப்பாட்டு கருவி 305 மொத்தம் 916 மின்னணு வாக்கு எந்திர பெட்டிகளை திட்டக்குடி தாசில்தார் கார்த்திக் , தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. 

Tags:    

Similar News