உள்ளூர் செய்திகள்
சுழலும் காமிராக்கள் மூலம் கண்காணிப்பு
- தேரின் முன்பாக போலீஸ் வேனில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
- ஜாதி ரீதியிலான பனியன்கள், ரிப்பன்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
நெல்லை:
தேரோட்டத்தின் போது பக்தர்களிடம் இருந்து செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சி.சி.டி.வி காமிராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து நெல்லையப்பர் தேரின் முன்பாக போலீஸ் வேனில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த ஆண்டு ஜாதி ரீதியிலான பனியன்கள், ரிப்பன்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சில தனியார் நிறுவனங்கள் ஒரே மாதிரியான பனியன்களை வழங்கினர். அதனை அணிந்து தேருக்கு தடி போடுபவர்கள் தடி போட்டனர். மேலும் தேருக்கு முன்பாக நாதஸ்வரம், செண்டை மேளம் முழங்கப்பட்டது. மேலும் சிவனடியார்களும் சங்கொலி எழுப்பினர். தேரோட்டத்தை ஒட்டி 4 ரதவீதிகளிலும் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின் வயர்களை அகற்றி தேரோட்டத்திற்கு வழிவகை செய்தனர்