உள்ளூர் செய்திகள்

பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

கோடைக்கால பயிற்சி நிறைவு விழா

Published On 2023-05-25 14:44 IST   |   Update On 2023-05-25 14:44:00 IST
  • கடைவீதி, விருபாட்சிபுரம், போன்ற பகுதியிலிருந்து 300 மாணவ மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
  • பயிற்சி நிறைவு விழாவான நேற்று மாணவ மாணவிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில், தனியார் மண்டபம் அருகே உள்ள நகராட்சி தொகுப்பு பள்ளியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை ஜவகர் சிறுவர் மன்றம் சிறார்களுக்கான இலவசமாக கோடை கால பயிற்சி நடைபெற்றது.

இதில் சிலம்பாட்டம், ஓவியம், பரதநாட்டியம் உள்ளிட்ட கோடைகால பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டது. இதில் குமாரசாமிபேட்டை, காந்திநகர், எம்ஜிஆர் நகர், அப்பா நகர், அண்ணா நகர், கடைவீதி, விருபாட்சிபுரம், போன்ற பகுதியிலிருந்து 300 மாணவ மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

பயிற்சி நிறைவு விழாவான நேற்று மாணவ மாணவிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிலம்பம் ஆசிரியர் ராஜா வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், இசக்கி ஓவிய ஆசிரியர் சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஆசிரியர்கள் மாணவ, மாணவர்களுக்கு கலந்துகொண்டனர். நிகழ்சியின் இறுதியில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News