உள்ளூர் செய்திகள்
சாலைகளை சீரமைக்க மதுரை மாநகராட்சிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை
- மதுரை சாலைகள் பற்றி ஊடகங்களில் விமர்சனங்கள் எழுதப்பட்டு வருகிறது.
- நகராட்சித்துறை கூடுதல் நிதி ஒதுக்கிப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மதுரை சாலைகள் பற்றி தொடர்ந்து ஊடகங்களில் விமர்சனங்கள் எழுதப்பட்டு வருகிறது. இதுவரை வந்ததிலேயே கடுமையான விமர்சனம் இது.
நிதி பற்றாக்குறையால் திணறும் மதுரை மாநகராட்சிக்கு சாலைகளை மேம்படுத்த நகராட்சித்துறை கூடுதல் நிதி ஒதுக்கிப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.