உள்ளூர் செய்திகள்

பஸ்சுக்காக நிலையத்தில் காத்திருக்கும் மாணவ-மாணவிகள்.

பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவ- மாணவிகள்; கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

Published On 2022-10-21 08:08 GMT   |   Update On 2022-10-21 08:08 GMT
  • மாணவிகள் தினமும் பள்ளி முடிந்தவுடன் அரசு பஸ்களில் செல்வது வழக்கம்.
  • கூடுதலாக பஸ்கள் ஏதும் இயக்கப்–படாததால், மாணவர்கள் கூட்ட நெரிசலில் செல்கின்றனர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் மணலி, ஆலத்தம்பாடி, பல்லாங்கோயில், கலப்பால், பாமணி, நெடும்பலம், திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மாணவ- மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளி முடிந்தவுடன் அரசு பஸ்களில் செல்வது வழக்கம்.

இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் வெளியூருக்கு செல்வ–தற்காக பயணிகள் அதிகளவில் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தில் குவிந்துள்ளனர்.

ஆனால், கூடுதலாக பஸ்கள் ஏதும் இயக்கப்–படாததால், மாணவர்கள் கூட்ட நெரிசலில் செல்கின்றனர். மேலும், பஸ்சுக்காக பல மணி நேரம் பஸ் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே, விழா காலங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News