உள்ளூர் செய்திகள்

பஸ்சின் பின்புற ஏணியில் நின்றும், படிக்கட்டில் தொங்கியப்படியும் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்.

பஸ்சின் பின்புற ஏணியில் நின்றும், படிக்கட்டில் தொங்கியப்படியும் பயணம் செய்யும் மாணவர்கள்

Published On 2023-11-15 09:43 GMT   |   Update On 2023-11-15 09:43 GMT
  • பள்ளி, கல்லூரிகளில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
  • காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை.

தஞ்சாவூர்:

தஞ்சையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதில் பெரும்பாலான மாணவ-மாணவிகள் பஸ்களிலே வந்து செல்கின்றனர். ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ்கள் இல்லாததால் பஸ் படிக்கட்டில் தொங்கியப்ப டியும், பின்னால் ஏறி நின்றும் ஆபத்தான வகையில் மாணவர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்த தனியார் பஸ்சில் புத்தக பைகளை தொங்கவிட்டப்படி படிக்கட்டில் தொங்கி கொண்டும், பின்னால் ஏணியில் ஏறி நின்றும் பல மாணவர்கள் ஆபத்தான வகையில் பயணம் செய்து வந்தனர். எதிர்பாராத வகையில் தவறி விழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேதனைப்பட்டனர்.

இது குறித்து மாணவர்கள் கூறும்பாது, தஞ்சையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரத்தநாடு, பூதலூர், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறோம். ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதனால் வேறு வழியின்றி பஸ்சில் தொங்கியப்படி பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் சில மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு பஸ்சை விட்டால் அடுத்த பஸ் வருவதற்குள் பள்ளி, கல்லூரிகள் வகுப்பு தொடங்கி விடும். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் வேறு வழியின்றி ஏறி வருகிறோம்.

படிக்கட்டில் தொங்கும் போதும், பின்னால் ஏணியில் ஏறி நிற்கும் போதும் தவறி விழுந்து விடுவோமோ என ஒருவித அச்சத்தில் தான் பயணிக்கிறோம். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும். குறிப்பாக ஒரத்தநாடு, பூதலூர், பாபநாசம், திருவையாறு பகுதிகளில் இருந்து தஞ்சைக்கும், இங்கிருந்து அந்தந்த பகுதிகளுக்கும் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News