உள்ளூர் செய்திகள்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் நேரில் கோரிக்கை மனு கொடுத்த மாணவிகள்.

பள்ளியில் புல்வெளி மைதானம் அமைக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மாணவ-மாணவிகள் கோரிக்கை

Published On 2023-08-10 09:03 GMT   |   Update On 2023-08-10 09:03 GMT
  • பள்ளி மைதானத்தில் ஏராளமான பொதுமக்களும்,பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகளும், தினமும் உடற்பயிற்சி மற்றும் விளையாடி பயன் பெற்று வருகின்றனர்.
  • இதனை முறையாக சீர்படுத்தி 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓடு தளங்கள் அமைத்து, தண்ணீர் பைப்புகள் அமைத்து தரவேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

உடன்குடி:

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட வெள்ளாளன்விளை பிஷப் அசரியா மேல்நிலை ப்பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வந்திருந்தார்.

அவரை நேரில் சந்தித்த பள்ளி மாணவ-மாணவிகள் அமைச்சரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியதாவது:-

பள்ளியில் விளையாட்டு மைதானம் மிகப்பெரிய அளவில் உள்ளது. இதில் ஏராள மான பொதுமக்க ளும்,பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகளும், தினமும் உடற்பயிற்சி மற்றும் விளையாடி பயன் பெற்று வருகின்றனர்.

இதனை முறையாக சீர்படுத்தி 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓடு தளங்கள் அமைத்து, தண்ணீர் பைப்புகள் அமைத்து அதில் கால்பந்து விளையாடும் விதமாக ஒரு புல்வெளி மைதானம் அமைத்து தர வேண்டுகிறோம். இதன்மூலம் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் ஞானராஜ், வெள்ளா ளன்விளை ஊராட்சிமன்ற தலைவர் ராஜரத்தினம், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News