உள்ளூர் செய்திகள்

போதிய பேருந்துவசதியின்றி காரிமங்கலம் கல்லூரி மாணவிகள் தவிப்பு

Published On 2023-08-26 15:23 IST   |   Update On 2023-08-26 15:23:00 IST
  • பள்ளி கல்லூரிக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
  • 9 மணி முதல் 9.30 மணி வரை நகரப் பேருந்துகள் குறைவாக இயக்குவதால் மாணவிகள் சிரமம் அடைகின்றனர்.

 தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகரத்தை ஓட்டி அரசு கலை கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐடிஐ, அரசு பள்ளிகள் உள்ளது .

இந்த பள்ளி, கல்லூரி களில் தருமபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தினந்தோறும் தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து மீண்டும் நகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதில் தருமபுரியில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தருமபுரி நகர பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் காலையில் 9 மணி முதல் 9.30 மணி வரை நகரப் பேருந்துகள் குறைவாக இயக்குவதால் மாணவிகள் கல்லூரி நேரத்திற்கு சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பேருந்துகளில் உயிரை பணயம் வைத்து முண்டியடித்து ஓடி பேருந்தில் ஏறுகின்றனர். அதேபோல் கல்லூரி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பும் போதும் பேருந்துகளை பிடிக்க மணி கணக்கில் காத்திருந்து பேருந்து பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது:-

அரசு மகளிருக்கு இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் மகளிர் கல்லூரிக்கு 5 பேருந்துகளை இயக்கினால் பெரும் பணம் இழப்பீடு ஏற்படுகிறது . இதனால் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை குறைவாக இயக்கி வருகிறது . அதேபோல் நகர பேருந்து நிலையத்திலிருந்து தருமபுரி அரசு கலைக் கல்லூரி, மாட்டிலாம் பட்டியில் உள்ள சட்டக் கல்லூரி, செட்டி கரை அரசு பொறியியல் கல்லூரி, பைசுஅள்ளியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி, கடகத்தூர் பகுதியில் உள்ள தொழில்பயிற்சி கல்லூரி, செட்டி கரையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி, உள்ளிட்ட பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இங்கிருந்து நகரப் பேருந்தில் ஏறி பள்ளி கல்லூரிக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.

இதனால் பொது மக்கள் செல்லும் பேருந்து களிலேயே ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவர்கள் படிகளில் தொங்கி பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News