உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம்

Published On 2023-07-05 09:12 GMT   |   Update On 2023-07-05 09:13 GMT
  • சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
  • நிகழ்ச்சியில் காகித பைகளை பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கினர்.

ஊட்டி,

சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி வளாகத்தில் தாளாளர் தன்ராஜ் அறிவுறுத்தலின்படி, நிர்வாக இயக்குநர் சம்ஜித் தன்ராஜ் முன்னிலையில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில் பிளாஸ்டிக் பொருட்களை பொது இடம், விவசாய நிலம் மற்றும் நீர்நிலைகளில் வீசி எறிவதால் ஏற்படும் விளைவுகள், சுற்றுச் சூழல் சீர்கேடு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சரோ தன்ராஜ், துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் மாணவர்கள் தயாரித்த காகித பைகளை பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கினர். முன்னதாக ஆசிரியை ஆஷா வரவேற்றார். மாணவி ஸ்ரீஆதிரா நன்றி கூறினார். 

Tags:    

Similar News