உள்ளூர் செய்திகள்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

நாங்குநேரி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-11-03 14:51 IST   |   Update On 2022-11-03 14:51:00 IST
  • நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரப்பாடி, காரியாண்டி, ராமகிருஷ்ணாபுரம், தினையூரணி உள்ளிட்ட கிராமங்களில் திடீரென்று டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது
  • நோயின் தீவிரம் அதிகமாக இருப்பதாக கூறப்படுவதால் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் வலியுறுத்தி இருக்கிறேன் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரப்பாடி, காரியாண்டி, ராமகிருஷ்ணாபுரம், தினையூரணி உள்ளிட்ட கிராமங்களில் திடீரென்று டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பரப்பாடி அரசு மருத்துவமனையிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட–வர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

காய்ச்சலின் பரவல் வேகமாக இருப்பதால், மேற்கொண்டு பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தையும், கலெக்டரையும் தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று ெசய்தியாளர்களிடம் கூறுகையில், டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த தகவல் எனக்கு கிடைத்ததும், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவை உடனடியாக தொடர்பு கொண்டு பேசினேன். நோயின் தீவிரம் அதிகமாக இருப்பதாக கூறப்படுவதால் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருக்கிறேன். பொதுமக்களையும் இந்த நேரத்தில் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Tags:    

Similar News