உள்ளூர் செய்திகள்

மண்ணுார் மலை கிராமத்தின் அழகிய தோற்றம். 

சேலம் மலை கிராமங்களூக்கு அதி நவீன செல்போன் வசதி

Published On 2023-05-04 07:08 GMT   |   Update On 2023-05-04 07:08 GMT
  • 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு, இதுவரை எந்த நிறுவனமும் செல்போன் சேவை வழங்கவில்லை.
  • பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவ னத்திற்கும் கடந்த 10 ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் அரு நுாற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சியிலுள்ள பெலாப்பாடி, பெரியகுட்டி மடுவு , சின்னகுட்டிமடுவு, சந்துமலை மற்றும் பெத்தநா யக்கன்பாளையம் ஒன்றியம் மண்ணுார், கெங்கவல்லி வட்டம் கொல்லிமலை பகுதி யிலுள்ள சேரடிமூலை, பச்சமலையிலுள்ள மண்மலை, வேங்கமுடி, ஆத்துார் ஒன்றியம் பைத்துார் பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு, இதுவரை எந்த நிறுவனமும் செல்போன் சேவை வழங்கவில்லை.

இந்த நவீன காலத்திலும் செல்போன் வசதியை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. எனவே, அதிநவீன கோபுரங்களை அமைத்து செல்போன் சேவை வழங்க வேண்டும் என மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மத்திய மாநில அரசு களுக்கும், பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவ னத்திற்கும் கடந்த 10 ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, மத்திய அரசின், மலை கிராமங்க ளுக்கு நவீன வசதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆத்துார் தொலை தொடர்பு கோட்டத்தில் பெலாப்பாடி, பெரியகுட்டிமடுவு, சின்ன குட்டிமடுவு, சந்துமலை, மண்ணுார், சேரடிமூலை, மண்மலை, வேங்கமுடி ஆகிய 8 இடங்களில், கண்ணாடியிழை கேபிள் இணைப்புடன் அதிநவீன 4 ஜி செல்லிடப்பேசி கோபு ரங்கள் அமைக்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடங்கியுள்ளது.

இத்திட்டப்பணிகள் நிறைவடைந்ததும், இதுவரை செல்லிடப்பேசி சேவை வசதியில்லாத அனைத்து மலை கிராம மக்களுக்கும் அதிநவீன செல்லிடப்பேசி வசதி கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News