உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காலபைரவர்.
மேலமறைக்காடர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு
- தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு யாகம் நடந்தது.
- பைரவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் மேலமறைகாடர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி ஆனந்த் சிவச்சாரியர்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
பின், கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து பைரவருக்கு பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.