உள்ளூர் செய்திகள்
மயான காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைெபற்றது.
பண்ணைக்காடு மயான காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
- வழிபாட்டில் பக்தர்கள் எலுமிச்சம் பழம், பூ, தேங்காய், பத்தி, சூடம் மற்றும் நெய் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது.
பெரும்பாறை:
பண்ணைக்காடு மயான காளியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. வழிபாட்டில் பக்தர்கள் எலுமிச்சம் பழம், பூ, தேங்காய், பத்தி, சூடம் மற்றும் நெய் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது.
அதேபோல் தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கோவில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.