உள்ளூர் செய்திகள்

வண்ணார்பேட்டையில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்

Published On 2023-09-02 14:59 IST   |   Update On 2023-09-02 14:59:00 IST
  • முகாமில் வார்டு 47 மற்றும் 49 பொது மக்கள் தங்கள் கட்டிடங்களின் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
  • இந்த பணிகளை மேயர் சரவணன் துணை மேயர் ராஜு ஆகியோர் பார்வையிட்டனர்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் வார்டுகளில் பின்தங்கி உள்ள வரிவசூலை மேம்படுத்துவதற்காகவும், வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினை அன்றைய தினம் நிலுவையின்றி செலுத்திடவும் வாய்ப்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

சிறப்பு முகாம்

அதன்படி மேலப்பாளையம் மண்டலம் வார்டு 47 மற்றும் 49 ஆகிய பகுதிகளில் வரி வசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக நேரூஜி வீதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இன்று சிறப்பு வரிவசூல் முகாம் நடந்தது.

இம்முகாமில் வார்டு 47 மற்றும் 49 பொது மக்கள் தங்கள் கட்டிடங்களின் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற வரியினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளித்தனர். மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டண வரிவிதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கினர்.

இதேபோல் நெல்லை மண்டலம் வார்டு 22-ல் பேட்டை செக்கடி அருகில் உள்ள துர்காலெட்சுமி மகாலில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திரளான மக்கள் கலந்து கொண்டு வரியை நிலுவையின்றி செலுத்தினர். இந்த பணிகளை மேயர் சரவணன் துணை மேயர் ராஜு ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது உதவி கமிஷனர் வெங்கட்ராமன், மண்டல சேர்மன் மகேஸ்வரி, கவுன்சிலர் உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தச்சநல்லூர் மண்டலம் வார்டு எண் 11 பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கான குறைதீர்க்கும் முகாம் வண்ணாரப்பேட்டை சாலை தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம் வார்டு எண் 32 பகுதிகளில் வரி வசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற்றது.

Tags:    

Similar News