உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி 

நெல்லையில் நாளை 4 வார்டுகளில் சிறப்பு வரிவசூல் முகாம்-மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

Published On 2023-09-08 14:33 IST   |   Update On 2023-09-08 14:33:00 IST
  • தச்சநல்லூர் மண்டலத்தில் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
  • குடிநீர் கட்டண வரி விதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் முகாமில் மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாநகராட்சி சார்பாக 4 மண்டல பகுதி களில் வரிவசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி நாளை (சனிக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.

4 மண்டல உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

நெல்லை மண்டலத்தில் வார்டு 15-ல் உள்ள டவுன் ராஜாஜிபுரம் (பாறையடி) மாநகராட்சி சமுதாய நலக்கூடத்திலும், பாளை யங்கோட்டை மண்டலத்தில் வார்டு 38-ல் உள்ள வி.எம்.சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டு 43-ல் உள்ள மத்திய சிறைச்சாலை எதிரில் காதுகேளாதோர் பள்ளி வளாகத்திலும்,

தச்சநல்லூர் மண்டலத்தில் வார்டு 12-ல் உள்ள செல்விநகர் அலகு எண்.1-ல் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாம்களில் அந்தந்த வார்டு பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள், வணிக வளாக உரிமையாளர்கள், தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக செலுத்திடவும்,

மேலும் சொத்து வரி, குடிநீர் கட்டண வரி விதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் கோரிக்கை மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

பின்தங்கியுள்ள வரி வசூலை மேம்படுத்துவ தற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினங்களை அன்றைய தினமே நிலுவையின்றி செலுத்தி ஒத்துழைப்பு நல்கிட மாநகராட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News