உள்ளூர் செய்திகள்
கோவையில் நாளை ேஷன் அட்டை திருத்த சிறப்பு குறைதீர் முகாம்
- குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், திருத்துவதற்கு வாய்ப்பு
- வட்ட வழங்கல் அலுவலகங்களில் மனுக்களாக வழங்கி பயன்பெறலாம்
கோவை,
பொது விநியோக திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோவை மாவட்ட த்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும், வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக 18-ந் தேதி(நாளை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் நடை பெறவுள்ளது.
இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், செல்போன் எண் மாற்றம் மற்றும் நகல் குடும்ப அட்டை பெறுதல் தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.