109-வது பிறந்தநாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
- எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி 109 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது.
சென்னை:
அ.தி.மு.க. நிறுவன தலைவரான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமைக் கழகத்திற்கு வருகை தந்தார். அவரை அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர்.
அப்போது வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தலைமைக் கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் கட்சி அலுவலகத்தில் திரண்டு இருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி 109 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. இந்த கேக்கையும் எடப்பாடி பழனிசாமி வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கட்சி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டன. இவற்றையும் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, ஜெயக்குமார் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் சென்னை மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், பாலகங்கா, ஆதிராஜாராம், புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், இலக்கிய அணி மாநில இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலாளர்கள் கே.எஸ்.மலர் மன்னன், எம்.ஜி.சக்திவேல்,
அம்மா பேரவை மாநில துணை செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் டி.சி. கோவிந்தசாமி, மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் காரப்பாக்கம் லியோ சுந்தரம், தேனாம்பேட்டை முன்னாள் கவுன்சிலர் சின்னையன், கழக மாணவர் அணி துணை செயலாளர் வக்கீல் பழனி, வடபழனி மின்சார சத்திய நாராயண மூர்த்தி, ஆயிரம்விளக்கு மேற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம், வி.எஸ்.வேல்ஆதித்தன், மாவட்ட துணை செயலாளர் சைதை சொ.கடும்பாடி, சைதை சி.எம்.சாமி, எம்.என்.இளங்கோ, ஆயிரம் விளக்கு டி.ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.