உள்ளூர் செய்திகள்
மாற்றத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.
கடலூரில் மாற்றத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
- மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவாக வழங்கினார்கள்
- மனுக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது
கடலூர்:
கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெற்றார். இதில் கடலூர் வருவாய் கோட்டத்தில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் 3 சக்கர மோட்டார் சைக்கிள், வங்கி கடன், மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவாக வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து மாற்றத்திறனாளிகள் வழங்கிய மனுக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அப்போது சமூக பாதுகாப்பு தாசில்தார் பிரகாஷ், தலைமையிடத்து துணை தாசில்தார் பழனி, மண்டல துணை தாசில்தார் துரைராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.