உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க.வினர் மனு அளிக்க வந்த காட்சி.

மதுரை மாநாட்டில் முதல்-அமைச்சர் பற்றி அவதூறு: எடப்பாடி பழனிசாமி மீது நெல்லை தி.மு.க.வினர் புகார்

Published On 2023-08-23 14:39 IST   |   Update On 2023-08-23 14:39:00 IST
  • மகளிர் தொண்டரணி சார்பில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
  • மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை அவதூறாக பாட்டுப்பாடி கதிரவன் விமர்சித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடை யப்பன் ஆலோசனையின்படி மாவட்ட மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் மகளிர் தொண்டரணி துணைத்தலை வர் வக்கீல் ஜெனிபர் தினகர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதில், மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோரை அவதூறாகவும், அநாகரீக மாகவும் பாட்டுப்பாடி விமர்சித்த கதிரவன், அதனை ரசித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அப்போது மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரேமா, துணை அமைப்பாளரும், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவருமான அனுராதா ரவிமுருகன் மற்றும் வழக்கறிஞரணி அமைப்பாளர் செல்வசூடாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான் ஆலோசனையின்பேரில், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அனிதா தலைமையில் மாவட்ட துணை செயலாளர் கிரிஜாகுமார், மகளிரணி சவுந்திரம், பவானி, வக்கீல்கள் ராஜா முகம்மது, மணிகண்டன் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags:    

Similar News