வனத்துறையினருக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட்டது.
வனத்துறையினருக்கு திறன் மேம்பாடு பயிற்சி
- அனைவரையும் வனச்சரக அலுவலர் அயூப்கான் வரவேற்றார்.
- அட்டவணைப்படுத்தப்பட்ட தடிமரங்கள் வனத்துறை சார்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சி.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு சரணலாயம் அமைந்துள்ளது. இந்த சரணாலய வனச்சரக அலுவலகத்தில் உள்ள வனத்துறையினருக்கு திறன் மேம்பாடு பயிற்சி திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ்குமார், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா, அறிவுரையின்படி நடைபெற்றது.
வேதாரண்யம் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு நாகை உதவி வன பாதுகாவலர் கிருபாகரன் தலைமை தாங்கினார்.
அனைவரையும் வனச்சரக அலுவலர் அயூப்கான் வரவேற்றார். வனச்சரக அலுவலர் ஓய்வு சுப்பையா நாகப்பட்டினம் வன உயிரின கோட்ட வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு தமிழ்நாடு வன சட்டம் 1882 மற்றும் 1972 இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டம், அட்டவணைப்படுத்தப்பட்ட தடிமரங்கள் வனத்துறை சார்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சி அளித்தனர்.