உள்ளூர் செய்திகள்

உலக உணவு தின கண்காட்சியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வேளாண் உரம் மற்றும் விதைகளை வழங்கினார்.

காரைக்குடியில் உலக உணவு தின கண்காட்சி

Published On 2022-10-17 06:19 GMT   |   Update On 2022-10-17 06:19 GMT
  • விவசாயிகள் உணவு உற்பத்தியை பெருக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
  • உழவர் நலத்துறையில் தனி நிதிநிலை அறிக்கையில் இதற்கான சிறப்புக் கண்காட்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

உலக உணவு தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் செட்டிநாட்டில் உள்ள உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சி நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரிய மிக்க பண்புகளைக் கொண்ட பயிர் ரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளது.

பாரம்பாரிய மிக்க உள்ளுர் ரகங்கள் மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான விரும்பத்தக்க புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் தனி நிதிநிலை அறிக்கையில் இதற்கான சிறப்புக் கண்காட்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளுர் பயிர் ரகங்களை கண்டறிந்து பகுதிக்கேற்ற சிறந்த மேம்பாட்டு ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டம் தோறும் இது குறித்த கண்காட்சிகள் வருடத்திற்கு 3 முறை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரிய மிக்க உள்ளுர் ரகங்களை காட்சிப்படுத்துதல், வேளாண் பல்கலைக்கழக பயிர்களை காட்சிப்படு த்துதல் விவசாய விஞ்ஞா னிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு திருவிழா, மரபியல் பன்முகத்தன்மை குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப உரை போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

அனைத்து விவசாயி களும் தங்கள் பகுதியில் விளையும் சிறந்த பண்புகளைக் கொண்ட பாரம்பரியமிக்க உள்ளுர் உயர்ரகங்களை காட்சிப் பொருளாக வழங்கி கண்காட்சியில் பங்கேற்று இதில் இடம் பெற்றுள்ள வேளாண் சார்ந்த உற்பத்திப் பொருட்களை அறிந்து, இது குறித்த கூடுதல் விவரங்களை அலுவலர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களது உணவு உற்பத்தியைப் பெருக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News