உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் பேரூராட்சி கூட்டம்

Published On 2022-10-02 08:48 GMT   |   Update On 2022-10-02 08:48 GMT
  • திருப்பத்தூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது.
  • நகரின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர பயன்பாடு இல்லாமல் இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி கூட்டம் சேர்மன் கோகிலாராணி நாராயணன் தலைமையில் நடந்தது. செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை சேர்மன் கான் முஹம்மது முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் தமது பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் பற்றி எடுத்துரைத்தனர்.

வர இருக்கும் பருவமழைையயொட்டி நகர் பகுதி மட்டுமில்லாமல் ஏனைய பிற பகுதிகளிலும் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் மற்றும் அதனை தடுக்கும் வகையில் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அது சம்பந்தமாக ஒலிபெருக்கி மூலமும், சுகாதார பணியாளர்கள் மூலமும், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் பேசப்பட்டது.

நகரின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர பயன்பாடு இல்லாமல் இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அதற்கு பதில் அளித்த சேர்மன், கடந்த கால நிர்வாகத்தை காட்டிலும் தற்சமயம் நான் பொறுப்பேற்றவுடன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் ஒன்றான தெரு விளக்கு மேம்படுத்துதல் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகர் பகுதிகளிலும் மின்விளக்குகளை ஏற்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உள்ளேன். வரும் காலங்களில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News