உள்ளூர் செய்திகள்

விழாவின்போது ஆசிரியர்களின் காலில் விழுந்து முன்னாள் மாணவர்கள் வணங்கினர்.

ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற முன்னாள் மாணவர்கள்

Published On 2022-09-08 08:39 GMT   |   Update On 2022-09-08 08:39 GMT
  • சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
  • ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கி முன்னாள் மாணவர்கள் ஆசி பெற்றனர்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். இதில் கடந்ம 1980-க்கு பின் இந்த பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை போற்றும் விதமாக விழா நடைபெற்றது.

விழாவில் முன்னாள், இந்நாள் ஆசிரியர்களை பாராட்டி பரிசு கேடயங்களை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வழங்கினார். இதையொட்டி மாணவர்கள் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர்.

இந்த விழாவில் மாவட்ட போலீஸ் செந்தில்குமார் பேசும்போது, வாழ்க்கையில் நாம் எதை இழந்தாலும் நம்மை காப்பாற்றுவது கல்விதான் என்று மாணவர்களிடம் கூறினார். பின்னர் அவருடன் மாணவ, மாணவிகளுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

Tags:    

Similar News