உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-09-24 08:11 GMT   |   Update On 2022-09-24 08:11 GMT
  • திருப்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
  • சிறுவர் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் இளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கருகுடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நேசம் ஜோசப், சிறுவர் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சாந்தி மூக்கையா என்பவருக்கு ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளும்படி வருவாய் துறை மூலம் கால அவகாசத்துடன் தகவல் அளிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட நபர் நடவடிக்கையும் எடுக்காததால் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு மற்றும் ஏனைய பகுதிகளை அகற்றினர். மேலும் சம்பந்தப்பட்ட நபருக்கு தகுதி அடிப்படையில் அதே பகுதியில் வசிப்பதற்கு வேறொரு இடமளிக்க பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம், நாச்சியாபுரம் சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிளி மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News