உள்ளூர் செய்திகள்

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

Published On 2023-06-16 13:47 IST   |   Update On 2023-06-16 13:47:00 IST
  • சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
  • ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் குருவார பிரதோஷ வழிபாடு நடந்தது. மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில், சோமநாதர் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவர் பிராகாரத்தில் வலம் வந்தார்.

சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள சந்திரமவுலீசுவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜையும், குறிச்சி வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் காசிவிஸ்வநாதர், காசிநந்திக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். மேலெநெட்டூரில் உள்ள சொர்ணவாரீசுவரர்-சாந்தநாயகி அம்மன் கோவில், இடைக்காட்டூர் ஆதிமணிகண்டேசுவரர் கோவில், வேம்பத்தூர் கைலாசநாதர்-ஆவுடையம்மன் கோவில்களிலும் குருவார பிரதோஷ வழிபாடு நடந்தது.

Tags:    

Similar News