உள்ளூர் செய்திகள்

புரவி எடுப்பு விழா

Published On 2022-07-14 16:01 IST   |   Update On 2022-07-14 16:02:00 IST
  • மானாமதுரை அருகே புரவி எடுப்பு விழா நடந்தது.
  • கடந்த 12 வருடங்களாக பல்வேறு காரணங்களால் இந்த திருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் காவேரி அய்யனார், சமயகருப்பண சுவாமிகோவில் புரவி எடுப்பு திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். தஞ்சாக்கூர், ஆலடிநத்தம், முகவூர், புலவர்சேரி ஆகிய கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்த விழாவை கொண்டாடுவார்கள்.

இந்த கோவில் ஆலடிநத்தம், தஞ்சாக்கூர் மற்றும் முகவூர் கிராமத்திற்கு பாத்தியப்பட்டது ஆகும். இங்கு கடந்த 12 வருடங்களாக பல்வேறு காரணங்களால் இந்த திருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது.

12 வருடத்திற்கு பிறகு இன்று கொண்டாடப்பட்டது. இதில் ஆலடிநத்தம் கிராமத்தைச்‌ சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு குதிரை எடுப்பு திருவிழா நடத்தினால் அவர் மனம் குளிர்ந்து மழை பெய்யும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடந்தது. வேளார் தெருவில் இருந்து 24 குதிரைகளை திருமணம் ஆகாத இளைஞர்கள் திருமணம் நடைபெற நேர்த்திகடனாக சுமந்து ஊரை வலம் வந்து அய்யனாருக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடனாக கொடுத்தனர்.

இதேேபால் பெண்களும் பொம்மைகளை சுமந்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

Tags:    

Similar News