முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
- தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
- இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
தேவகோட்டை
சிவகங்ைக மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. காப்பு கட்டிய நாள் முதல் காலை, மாலை நேரங்களில் லட்சார்ச்சனை, 108 சங்காபிஷேகம், பால், தயிர், மஞ்சள் மற்றும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி நயினார்வயல் அகத்தீசுவரர் கோவிலில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு பல வகையான பூக்கள் அடங்கிய தட்டுகளை எடுத்து வந்தனர். பின்னர் கோட்டூர் முத்துமாரியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
பங்குனி உற்சவ விழா முளைப்பாரி திருவிழாவில் இன்று இரவு அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. நாளை காலை முளைப்பாரி செலுத்துதல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.