தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர்-தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ.
- திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் செயல்படுத்தி வருகிறார்.
- தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் என்று மானாமதுரை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் உள்ள இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தமிழக அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஏராளமான திட்டபணிகள் நடைபெற்று வருகிறது.
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்-முன்னாள் அமைச்சர் ஆ.தமிழரசி ரவிக்குமார் கூறியதாவது:- தாயுள்ளம் கொண்ட நமது தமிழக முதல்வர் இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும், திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் செயல்படுத்தி வருகிறார்.
மகளிர் முன்னேற்றத்தில்மிகவும் அக்கறையுடன் கட்டணமில்லா பஸ்பயணம், உயர் கல்வி கற்கும் மாணவிகளுக்குமாதம் ரூ.1000 திட்டம், வரும்பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், வீடுதேடிவரும்மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்களும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இதுதவிர மாதந்தோறும் மாவட்டங்களில் திட்டங்கள் செயல்படுத்துவது பற்றி கள ஆய்வு பணி, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் நிறைவேற்றப்படாத வளர்ச்சி பணிகள் நமது மானாமதுரை தொகுதியில் இளையான்குடி பேரூராட்சிக்கு தற்போது ரூ.9 கோடி மதிப்பில் திட்டப்பணிகள், மானாமதுரை வைகை ஆற்றில் புதிய பாலம், நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலக கட்டிடங்கள், உயர் நிலை-மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், புதிதாக நெல்கொள்முதல் நிலையங்கள், மானாமதுரையில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம், திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல், செல்லப்பனேந்தல் இடையே வைகைஆற்றில் புதிய பாலம், மானாமதுரை வைகைஆற்றில் குடிநீர்திட்டத்திற்காக தடுப்பணைகள், கிராமங்கள் முழுவதும் புதிதாக பஸ் வசதி, மானாமதுரையில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மையம்,சொட்டதட்டி- பனையூர் சுற்றுசாலை திட்டம், தற்போது உலகமே வியக்கும் கீழடி, கொந்தகை, மணலூர்அகழ்வாராய்ச்சி பணிகள் முடிக்கப்பட்டு இன்று ரூ.18 கோடி மதிப்பீட்டில் தமிழக செட்டிநாடு கலையில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும், அகழ்வாராய்ச்சி பணியில் கிடைத்த பல அரிய பொருட்களை தமிழக மக்கள் எளிதாக பார்த்து பயன் அடையும் வகையில் எதிர்கால நமது தலைமுறைக்காக கீழடியில் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்தை தாயுள்ளம் படைத்த நமது தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு பெருமை ஆகும்.
மதுரை-ராமேசுவரம் சாலையில் இருந்து எளிதாக கீழடிஅருங்காட்சியகம் வருவதற்காக புதிய சர்வீஸ் சாலை மற்றும் சாலையை கடக்க நடைபாலம் அமைக்கவும், சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.