உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு முகாமில் ஒரு பெண்ணுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பணி நியமன ஆணையை வழங்கினார்.

வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல்

Published On 2022-12-11 08:47 GMT   |   Update On 2022-12-11 08:47 GMT
  • சிங்கம்புணரி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
  • ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றி யங்களில் வேலைவாய்ப்பு முகாம், பள்ளி மற்றும் மயான பகுதிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், நியாயவிலைக் கடை திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்று வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தனியார் கல்வி நிறுவனமான எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஒன்றிய, நகர தி.மு.க. ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

அதில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான ஆணையை முகாமில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பாக ரூ.19 லட்சம், அரசு நிதியில் இருந்து ரூ.38 லட்சம் என மொத்தம் ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு மேல்நி லைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை நடந்தது.

மேலும் முஸ்லிம்களின் மயான பகுதிக்கு சுற்றுச்சுவர் கட்ட அமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சம், அரசு நிதி ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அதற்கான பணியை தொடங்கி வைத்தார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் சார்பில் முறையூர், அரளிப்பட்டி, கிருங்கா கோட்டை, சூரக்குடி, காளாப்பூர், சிங்கம்புணரி போன்ற பகுதிகளில் உள்ள 91 பயனாளிகளுக்கு ரூ.27.01 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன், புதிய வாகனம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு மற்றும் பிரான்மலை ஊராட்சி போன்ற பகுதிகளில் நீண்ட நாள் கோரிக்கையான முழுநேர புதிய நியாய விலை கடைகளை அமைச்சர் திறந்து வைத்து அந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் மகளிர் சுயநிதி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கோ.ஜினு, துணைப் பதிவாளர் குழந்தை வேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல்,ஆவின் பால்வளத் தலைவர் சேங்கை மாறன், பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், செயல் அலுவலர் ஜான் முகமது, கவுன்சிலர் செந்தில் கிருஷ்ணன், 2-வது வார்டு கவுன்சிலர் முகமது நிஷா ஷேக் அப்துல்லா, பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News