உள்ளூர் செய்திகள்

கார் மோதி லாரி கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம். 

லாரி-கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டாக்டர்

Published On 2023-02-23 15:31 IST   |   Update On 2023-02-23 15:31:00 IST
  • சிவகங்கை அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
  • இதில் அதிர்ஷ்டவசமாக டாக்டர் உயிர் தப்பினார்.

நெற்குப்பை

சிவகங்கை அரசு மருத்துவ மனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார்.இவர் காலையில் பணிக்கு சென்று விட்டு மதியம் 1 மணியளவில் காரில் திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். திருக்கோஷ்டியூரை அடுத்த கே.பிள்ளையார் பட்டி அருகே கார் வந்த போது எதிரே பேரீச்சம் பழம் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது பயங்கர மாக மோதியது. இருந்தபோதிலும் காரில் உள்ள உயிர் காக்கும் பலூன் உடனடியாக விரிந்தது. இதனால் காரை ஓட்டி வந்த டாக்டர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

இருப்பினும் லாரி கார் மீது கவிழ்ந்து விழுந்தது. இதனால் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டிரைவர் சுல்தான் மற்றும் உதவியாளர் மகேஸ்வரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அவர்களை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News