திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
- சிவகங்கை மாவட்டத்தில் திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணை யாளர் லால்வேனா, கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.
அவர்கள் படமாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஏற்கனவே இருந்த கழிப்பறை சேதமடைந்ததைத் தொடர்ந்து பள்ளியினை புனரமைப்பதற்காகவும், பள்ளி மாணவ-மாணவிகளின் வசதிக்காகவும் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டுமான பணிகளை பார்வை யிட்டனர்.
பின்னர் கிராமப்புறங்க ளில் நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நமச்சிவாயபுரம் கண்மாயில் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரி புனரமைத்து ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ள கண்மாயினையும், மாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்ட உபகரணங்களையும் பார்வையிட்டனர்.
மேலும் பள்ளி உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறையினையும். கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில தொகுப்பு மேம்பாட்டின் கீழ் 15.41 ஏக்கர் நிலத்தினை சீர்செய்து சமப்படுத்தி ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தரிசு நிலங்களில் பழம் வகை மரக்கன்றுகள் நடவு செய்து 36 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபால், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகு மலை, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி, வேளாண் பொறி யியல் செயற்பொறியாளர் செல்வம், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி, வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் வளர்மதி, வட்டாட்சியர்தங்கமணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.