உள்ளூர் செய்திகள்

பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளார்.

பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் தொகை

Published On 2023-03-15 08:52 GMT   |   Update On 2023-03-15 08:52 GMT
  • பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
  • 45 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 85 ஆயிரத்திற்கான காசாசோலையை வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கீழச்சிவல் பட்டி அருகே இளையாத்தங்குடியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் பொது பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பால் உற்பத்தியாளர் களுக்கு போனஸ் தொகை மற்றும் கூடுதல் கொள்முதல் விலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 45 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 85 ஆயிரத்திற்கான காசாசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் வெங்க டேஷன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், துணை செயலாளர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்ட மைப்பு தலைவர் மாணிக்க வாசகம், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், மற்றும் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News