உள்ளூர் செய்திகள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பசுமை தமிழகம் இயக்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா, கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் மரக்கன்று நட்டனர்.

20 நிமிடங்களில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சாதனை

Published On 2022-10-17 06:29 GMT   |   Update On 2022-10-17 06:29 GMT
  • 20 நிமிடங்களில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்தனர்.
  • மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக அனுப்பட்டுள்ளது.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டத்தில் பசுமை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி 6 நாட்களில் 1 லட்சம் மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதனை முன்னிட்டு கடந்த 9-ந் தேதி காரைக்குடி கவிஞர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பசுமை திருவிழாவை தொடங்கி வைத்தார்.

5-ம் நாளான நேற்று வரை 80 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சமுக ஆர்வலர்கள் விவசாயிகள் என அனைத்து தரப்பினர்க ளுக்கும் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, 6-ம் நாளான இன்று கின்னஸ் சாதனை முயற்சியாக, 20 நிமிடங்களில் 25 ஆயிரத்து 350 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது.

அழகப்பா கலை கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை முயற்சியை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் லால்வேனா, காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மரங்களை ஆர்வமுடன் நட்டனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக அனுப்பட்டுள்ளது. முடிவில் ஐ.எம்.ஏ. காரைக்குடி கிளை செயலாளர் டாக்டர் குமரேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News