உள்ளூர் செய்திகள்

சிவகங்கை யூனியனுக்குட்பட்ட பாணபரன் கண்மாயில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் கண்மாய்களில் சீரமைப்பு பணிகள்

Published On 2022-10-12 07:45 GMT   |   Update On 2022-10-12 07:45 GMT
  • ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் கண்மாய்களில் சீரமைப்பு பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.
  • பருவமழையால் கிடைக்கும் நீரை சேமிப்பதற்கு ஏதுவாக இந்த பணிகளை தரமான முறையில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை

சிவகங்கை யூனியனுக்கு உட்பட்ட பாணபரன் மற்றும் படமாத்தூர் கண்மாய்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 யூனியன் பகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வசதிகளும் மேம்படுத்துவது மட்டுமின்றி, நீர்வள ஆதாரங்களை சீரமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், வரத்துக்கால்வாய் சீரமைத்தல், சங்கன் பிட் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை யூனியனுக்கு உட்பட்ட 43 ஊராட்சிகளில் 88 தொகுப்புக்களில் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகள் தொடர்பாக சிவக ங்கை யூனியனுக்கு உட்பட்ட பில்லூர் ஊராட்சி, கரும்பாவூர் கிராமத்தில் ரூ.8.56 லட்சம் மதிப்பீட்டில் பாணபரன் கண்மாய் சங்கன் பிட் மற்றும் படமாத்தூர் கிராமத்தில் ரூ.7.67 லட்சம் மதிப்பீட்டில் படமாத்தூர் கண்மாய் சங்கன் பிட் ஆகியவைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

பருவமழையால் கிடைக்கும் நீரை சேமிப்பதற்கு ஏதுவாக இந்த பணிகளை தரமான முறையில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி கேட்டறிந்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) விசாலாட்சி, உதவிப்பொறியாளர்கள் கிருஷ்ணகுமாரி, தேவிசங்கர், சையது இப்ராகிம், ஒன்றியப்பணி மேற்பார்வையாளர் (ஓவர்சியர்) செந்தில்நாதன், சாலை ஆய்வாளர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதசுந்தரம், ஊராட்சி மன்றத்தலைவர்கள் சுமதி சரவணன் (பில்லூர்), மங்களம் (படமாத்தூர்) ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News