உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு

Published On 2022-06-26 08:09 GMT   |   Update On 2022-06-26 08:09 GMT
  • திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் அனைத்து தாலுகா நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் இன்று நடைபெற்றது.
  • இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் அனைத்து தாலுகா நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் இன்று நடைபெற்றது.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடித்து சமரச முறையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

காசோலை தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து, சமரசம் செய்ய கூடிய குற்றவியல் வழக்கு, விவாகரத்து தவிர்த்த குடும்ப பிரச்சினைகள், தொழிலாளர் நலம், விற்பனை வரி, வருமானவரி, சொத்து வரி உள்ளிட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டது. திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவருமான லதா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News