உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட விக்னேஷ் கண்ணன், பறிமுதல் செய்யபட்ட நகைகள்.

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது; நகைகள் பறிமுதல்

Published On 2022-11-16 10:11 GMT   |   Update On 2022-11-16 10:11 GMT
  • தனிப்படையினர் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.
  • 17 பவுன் நகைகள், இருசக்கர வாகனம் பறிமுதல்.

பட்டீஸ்வரம்:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து திருட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் படி, கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொ) ராஜ்குமார் மேற்பார்வையில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், பார்த்திபன்நாதன், நாடிமுத்து , செந்தில், ஜனார்த்தனன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா அரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன் என்பவரை பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து விக்னேஷ் கண்ணனை கைது செய்து 17 பவுன் நகைகளையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News