கிருஷ்ணகிரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- மாநில நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அத்துமீறி சோதனை நடத்தியதாக கண்டித்து இநத ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாவட்ட பொதுச் செயலாளர் கலீல் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாநில நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அத்துமீறி சோதனை நடத்தியதாக கண்டித்து இநத ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட துணை தலைவர் பக்ருத்தீன் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் கபீர் வரவேற்றார்.
மாவட்ட பொதுச் செயலாளர் கலீல் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அஸ்கர் அலி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் துரைகுட்டி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஆதம்பாஷா ஆகியோர் பேசினார்கள்.இதில் மாவட்ட பொருளாளர் ஜாவித்பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சதாம் உசேன், ஜெயக்குமார், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஷர்புதீன், மாவட்ட செயலாளர் முன்னா, மாவட்ட பொருளாளர் உசேன், மாவட்ட துணை தலைவர் கராமத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொகுதி ஊடக அணி பொறுப்பாளர் சதாம்உசேன் நன்றி கூறினார்.