களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கூட்டம்
- சிறப்பு அழைப்பாளராக களந்தை மீராசா கலந்து கொண்டு பேசினார்.
- கூட்டத்தில் பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
களக்காடு:
களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் இன்று காலை நகர அலுவலகத்தில் நடைபெற்றது. இணை செயலாளர் முகம்மது ரபிக் வரவேற்று பேசினார். நகர துணை தலைவர் கபீர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு களிலும் தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரக் கோரியும், புதிய பஸ் நிலையம் எதிரில் தனியார் விடுதி அமைந்துள்ள உப்பாறு 16 அடி பாதையை மீட்டு தரக் கோரியும் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பும் வகை யில் வருகின்ற 22-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் போராட்டம் நடைபெறும் என்று தீர்மானிக்கப் பட்டது.
களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி களிலும் இன்புளுயன்சா நோய் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஆரிப் பைஜி, முகம்மத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.