உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டையில் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கோகிலா ஆய்வு செய்தார்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு பணி

Published On 2022-06-19 09:26 GMT   |   Update On 2022-06-19 09:26 GMT
  • இந்த பகுதியில் செயல்படும் பள்ளிகளில் மொத்தம் 283 வாகனங்கள் உள்ளன. அதில் 147 வாகனங்கள் ஆய்வில் கலந்து கொண்டன.
  • உங்கள் வாகனத்தில் உங்களுடன் பயணிக்கும் குழந்தைகள் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்வார்கள்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காலை முதல் பள்ளி வாகனங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. மாநில போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பெயரில் பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் (பொ) கோகிலா, பரிந்துரையின் பெயரில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டிணம், பேராவூரணி, மதுக்கூர் உள்ளிட்ட பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வரும் ஊர்களில் செயல்படும் பள்ளி வாகனங்கள் தர ஆய்வில் கலந்துகொண்டன.

சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், ஆய்வாளர் ராஜேஷ், தீயணைப்பு துறை ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். இந்த பகுதியில் செயல்படும் பள்ளிகளில் மொத்தம் 283 வாகனங்கள் உள்ளன. அதில் 147 வாகனங்கள் ஆய்வில் கலந்து கொண்டன. 136 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டி இருந்தது, அவசர உதவி பெட்டி, மறந்து பெட்டி, ஜிபிஎஸ் கேமரா, தீயணைப்பு உபகரணங்கள், வாகனத்தின் தரைத்தளம், வாகனத்தின் உடற்கூறு மற்றும் பொறியியல் நிலைகள் குறித்து ஆய்வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இதுவரை நடைபெற்ற வாகன சோதனையில் பாதுகாப்பின்மை, அவசரவழி கதவினை திறக்க முடியாதது போன்ற காரணங்களால் 2 வாகனங்களுக்கு தரச்சான்றிழ் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்து. பள்ளிக்குழந்தைகளை ஏற்றிசெல்லம் வாகனங்கள் என்பதால் வாகன ஆய்வு கடுமையாக பின்ப்பற்றப்படுவதாக வாகன ஓட்டிகள் கூறினர். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கோகிலா மற்றும் கலந்துகொண்ட அதிகாரிகள் ஓட்டுனர்களிடம் கலந்துரையாடிய போது, பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு என சில சமூக கடமைகள் இருக்கிறது.உதராணமாக நீங்கள் சிகப்பு விளக்கு எரியும் போதோ, போக்குவரத்து காவலர் தடுக்கும் போதோ, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி விதிகளை மீறி செயல்படுவது போன்ற செயல்களை நீங்கள் செய்யும் போது, உங்கள் வாகனத்தில். உள்ள குழந்தைகள் எதிர்காலத்தில் நீங்கள் செய்யும் தவறினை, சரி என நினைத்து தவறாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. போக்குவரத்து விதிகளை பயிற்றுவிக்கும் ஒரு மகத்தான சமூகபணி உங்கள் முன் இருக்கிறது என்பதை நீங்கள் அணைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

உங்கள் வாகனத்தில் உங்களுடன் பயணிக்கும் குழந்தைகள் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்வார்கள். ஆக தங்கள் அனைவரின் செயல்பாடும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எதிர்கால ஒரு சமூகம் உங்களை பின்பற்றுகிறது என்பதை அறிந்து செயல்படுங்கள் என பேசினார். காலை 8 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த வாகன சோதனை, பத்தரை மணிக்கு மேல் நடைபெற்றது. காத்திருந்த விருந்தினர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News