உள்ளூர் செய்திகள்

புவனகிரி அருகே சேலை தீப்பிடித்து மூதாட்டி பலி

Published On 2023-04-11 14:21 IST   |   Update On 2023-04-11 14:21:00 IST
  • கமலம் (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்
  • நேற்று இரவு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அதன் அருகாமையில் உட்கார்ந்திருந்தார்

கடலூர்:

புவனகிரி அடுத்த வடக்குத்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலம் (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அதன் அருகாமையில் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது சேலை தீப்பற்றியது. இதனை மூதாட்டி கவனிக்காததால், தீ மள மளவென பரவி உடல், கை, கால்கள் முற்றிலும் எரிந்தது.

இவரின் அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News