உள்ளூர் செய்திகள்
சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நியமனம்- சரத்குமார் அறிவிப்பு
- வட சென்னை மேற்கு மாவட்டச்செயலாளராக துரைசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச்செயலாளராக செயல்பட்டு வந்த ஜெகன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை:
சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணி துணைச்செயலாளர்களாக சேலம் மாவட்டத்தை சார்ந்த தனலட்சுமி, சென்னை மாவட்டத்தை சார்ந்த ஷீபா ஆகியோரும், வட சென்னை மேற்கு மாவட்டச்செயலாளராக துரைசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச்செயலாளராக செயல்பட்டு வந்த ஜெகன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில பொதுக்குழு உறுப்பினராகவும், ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச்செயலாளராக யுவராஜும் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.