உள்ளூர் செய்திகள்
- 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
- பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
சேலம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-
ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை அண்ணா நகரில் சுமார் 100 குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றோம். மேலும் ஆத்தூர் நகராட்சியில் நாங்கள் வீட்டு வரி, மின்சார கட்டணம் ஆகியவை செலுத்தி வருகின்றோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.