உள்ளூர் செய்திகள்

சேலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Published On 2023-08-29 15:19 IST   |   Update On 2023-08-29 15:19:00 IST
  • ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்தி ரம் வரை 10 நாட்களுக்கு ஓணம் கொண்டாடப்படு கிறது.
  • தங்களை காண வரும் மகாபலி மன்ன னுக்காக அத்தப்பூ கோலம்போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.

சேலம்

கேரளாவில் ஓணம் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்தி ரம் வரை 10 நாட்களுக்கு ஓணம் கொண்டாடப்படு கிறது.

மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடு கின்றனர். தங்களை காண வரும் மகாபலி மன்ன னுக்காக அத்தப்பூ கோலம்போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.

இதன் அடிப்படையில் சேலத்தின் பல்வேறு பகுதியில் வசிக்கும் கேரளா மாநில மக்கள் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடினர். சேலம் சங்கர் நகர் பகுதி யில் உள்ள கேரளா சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து வண்ண, வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் வரைந்து பூக்களைச் சுற்றிலும் நடன மாடி பாட்டுப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னர். மேலும் ஒருவருக்கு ஒரு வர் இனிப்பு களை பகிர்ந்து கொண்டு ஓணம் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண்டனர். இதுபோல சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓணம் பண்டிகை களைக்கட்டியது.

Similar News