விடுதியில் என்ஜினீயரிங் பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை
- அவர் திடீரென வாந்தி எடுத்ததால் லாட்ஜ் ஊழியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- தேவ் ஆனந்துக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
சேலம்
கரூர் மாவட்டம் தோட்டாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் தேவ் ஆனந்த் (29). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் அறை அடுத்து தங்கினார்.
அப்போது அவர் திடீரென வாந்தி எடுத்ததால் லாட்ஜ் ஊழியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் தேவ் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தேவ் ஆனந்துக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திரும ணம் நடந்துள்ளது. தற்போது 10 மாத குழந்தை உள்ளது.இந்த நிலையில் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்றும் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த தேவ் ஆனந்த் சேலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.