உள்ளூர் செய்திகள்

சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியையிடம் 2 பவுன் செயின் பறிப்பு

Published On 2023-08-29 15:20 IST   |   Update On 2023-08-29 15:20:00 IST
  • கன்யா சேலம் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழ கத்தில் தற்காலிக உதவி பேராசி ரியராக பணி புரிந்து வருகிறார்.
  • மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிய சென்று விட்டனர்.

சேலம்

சேலம் கருப்பூர் அருகே உள்ள கோட்டகவுண்டம் பட்டி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜ சேகரன். இவரது மனைவி சுகன்யா (35), இவர் சேலம்

கருப்பூர் பெரியார் பல்கலைக்கழ கத்தில் தற்காலிக உதவி பேராசி ரியராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு 8 மணி யளவில் வழக்கம் போல பணி முடிந்து வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார். மொபட் பெரியார் பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை திடீரென பறித்த னர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா கூச்ச லிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிய சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து காமிரா பதிவுகளை வைத்து செயினை பறிதது சென்ற நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

Similar News