உள்ளூர் செய்திகள்

கிச்சிப்பாளையத்தில் பரபரப்பு காவல் தெய்வ சிலை உடைப்பு

Published On 2023-08-11 09:38 GMT   |   Update On 2023-08-11 09:38 GMT
  • சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
  • இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் முனியப்பன் கோவில் எதிரில் உள்ள காவல் தெய்வம் சிலை மற்றும் நாய் சிலைகள் உடைக்கப்பட்டன.மேலும் அந்த பகுதியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் குடிநீர் பைப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் இரவு நேரங்களில் கத்தி, பைப், ராடுகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றி வருகிறார்கள்.இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிச்சிபாளையம் போலீஸ் நிலையத்திலும் அந்த பகுதியினர் மனு கொடுத்துள்ளனர். கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News