உள்ளூர் செய்திகள்

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் தங்க கவச அலங்காரத்திலும், எல்லை பிடாரி அம்மன் வளையல் மற்றும் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம். 

அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு

Published On 2023-07-21 15:03 IST   |   Update On 2023-07-21 15:03:00 IST
  • இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பூரத்தை முன்னிட்டு சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப் பட்டு வழிபாடு நடந்தது.
  • சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் இன்று அதிகாலை முதலே குவிய தொடங்கினர்.

சேலம்:

ஆடி மாதத்தின் அனைத்து நாட்களுமே அம்மனை வழிபட ஏற்ற காலம் என்றாலும், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் அம்மனை வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களை தரக் கூடியதாகும்.

பெண்கள் வழிபாடு

அதன்படி இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பூரத்தை முன்னிட்டு சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப் பட்டு வழிபாடு நடந்தது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் இன்று அதிகாலை முதலே குவிய தொடங்கினர். அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

வளையல் அலங்காரம்

அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.

அய்யந்திருமாளிகையில் உள்ள மாரியம்மன் கோவி லில் சிவன் குடும்ப அலங்கா ரமும், எல்லை பிடாரி அம்மன் கோ விலில் அம்ம னுக்கு வளையல் மற்றும் தங்க கவச அலங்காரமும், அன்னதானப்பட்டி தண்ணீர் பந்தல் காளியம்ம னுக்கு வளையல் அலங்கா ரமும் செய்யப்பட்டது. இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இதே போல் சேலம் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

Similar News