சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து மோட்டார்சைக்கிள் திருட்டு
- சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தினமும் சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
- இரவு 9 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவு அருகே மொபட் நிறுத்தி விட்டு ஆஸ்பத்திரிக்குள் சென்றார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, மொபட் அங்கு இல்லை. இந்த மொபட்டை யாரோ திருடி சென்றுள்ளனர்.
சேலம்:
சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தினமும் சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். பலர் உள்நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு டாக்டர்கள், நர்சுகள், தொழிற் நுட்ப ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஏராளமானோர் பணியாற்று கின்றனர். அவர்கள் தங்களது மோட்டார்சைக்கிள், கார் உள்ளிட்டவைகளை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில், ஆஸ்பத்தி ரியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள், மொபட் திருட்டு நடைபெறுகிறது. அந்த வகை யில், டாக்டர் ஒருவருடைய மொபட் திருட்டு போயியுள்ளது.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருபவர் நவ்ரின் ரேகனே (வயது 26). இவர் கடந்த 19-ந்தேதி இரவு 9 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவு அருகே மொபட் நிறுத்தி விட்டு ஆஸ்பத்திரிக்குள் சென்றார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, மொபட் அங்கு இல்லை. இந்த மொபட்டை யாரோ திருடி சென்றுள்ளனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல் தாரமங்கலம், அமரகுந்தி அருகே உள்ள கள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 31). இவரது மனைவி பிரசவத்துக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவரை பார்க்க கடந்த 17-ந்தேதி இரவு 8.30 மணிக்கு மோட்டார்சைக்கிளில் வந்தார். பின்னர் அவர், அம்மா உணவகம் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு மகப்பேறு பிரிவுக்கு சென்றார். இதையடுத்து அவர், திரும்பி வந்தபோது அங்கு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிள் திருட்டு போயிருந்ததை கண்டு பதறினார்.
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டால் ஆஸ்பத்திரி ஊழியர்கள், நோயாளிகள் பீதி அடைந்துள்ளனர்.