உள்ளூர் செய்திகள்

வார விடுமுறையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2023-06-26 13:38 IST   |   Update On 2023-06-26 13:38:00 IST
  • சேலம் மாவட்டம், ஏற்காட்டில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பய ணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
  • இந்நிலையில், வார விடுமுறை நாளான நேற்று காலை முதலே, பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணி கள் குடும்பம் குடும்ப மாக ஏற்காட்டிற்கு வந்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பய ணிகள் வருகை அதிகமாக இருக்கும். இந்நிலையில், வார விடுமுறை நாளான நேற்று காலை முதலே, பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணி கள் குடும்பம் குடும்ப மாக ஏற்காட்டிற்கு வந்தனர்.

வெயில் தாக்கம் குறை வாகவும், இதமான சீதோஷ்ண நிலையும் காணப்பட்டதால், அண்ணா பூங்காவில் பல்வேறு மலர்களை ரசித்தும், விளை யாட்டு சாதனங்களில் குழந்தைகளுடன் விளையா டியும் பொழுதை போக்கி மகிழ்ந்தனர். நேற்று லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், சேர்வராயன் கோவில், பக்கோடாபா யின்ட் உள்ளிட்ட இடங்களி லும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

ஏரியில் குடும்பத்தி னருடன் உற்சாகமாக படகு சவாரி சென்றும் மகிழ்ந்த னர். சுற்றுலா பயணிகள் வருகையால், கடைகளில் விற்பனை அதிகரித்தது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News