உள்ளூர் செய்திகள்

சேலம் வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1 கோடியே 60 லட்சம் மோசடி

Published On 2023-06-07 14:41 IST   |   Update On 2023-06-07 14:41:00 IST
  • நண்பர் ஜான் மரியா என்பவர் மூலம், கர்நாடக மாநிலம் பெங்களூர் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
  • 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 60 லட்சத்தை அவர் கூறிய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

சேலம்:

சேலம் குகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் விஜய் வெங்கடேஷ். இவரது நண்பர் ஜான் மரியா என்பவர் மூலம், கர்நாடக மாநிலம் பெங்களூர் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

மேலும், பரத்வாஜ் தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பன்மடங்காக திரும்ப கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய விஜய் வெங்கடேஷ், கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 60 லட்சத்தை அவர் கூறிய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

ஆனால் பரத்வாஜ் கூறியபடி எந்த ஒரு தொகையும் கூடுதலாக கிடைக்காததால், தான் கட்டிய பணத்தை விஜய்வெங்கடேஷ் திரும்ப கேட்டபோது தர மறுத்துள்ளார்.

இதையடுத்து விஜய் வெங்கடேஷ் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் போலீசார் பெங்களூருவை சேர்ந்த பரத்வாஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News